5 மே, 2017


மே 6இல் பிறந்த உலகத் தலைவர்கள்


மோதிலால் நேரு

நாட்டின் சுதந்திரத்துக்காகத் தமது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதரான மோதிலால் நேரு, 1861ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார்.

மோதிலால் நேருவின் மகனான ஜவஹர்லால் நேரு தான், பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர். 

அதன்பின், 1888ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் தம்மை இணைத்துகொண்டார் மோதிலால் நேரு. எனினும், 1905ஆம் ஆண்டில் ஏற்பட்ட வங்கப் பிரிவினையின் போதுதான் மோதிலால் நேரு முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். 

ஜவஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டுமுறை காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்தார்.

இந்திய மக்களின் எளிமையால் கவரப்பட்டு, தமது செல்வங்கள் அனைத்தையும் துறந்த மோதிலால், தமது 69வது வயதில் (1931) மறைந்தார்.


பால் லாட்டர்பர்

MRI ஸ்கேனிங் கருவியின் தந்தை பால் கிறிஸ்டியன் லாட்டர்பர்,  1929ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம் சிட்னி நகரில் பிறந்தார்.

1950களில் கட்டாய ராணுவச் சேவையில் இருந்தபோது, அணுக்கரு காந்தப்புலம் (என்எம்ஆர்) தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இது பல்வேறு திட, திரவப் பொருள்களின் மூலக்கூறு கட்டமைப்புகள் தொடர்பான ஆய்வுகளில் முக்கிய கருவியாகப் பயன்பட்டது.

இவர் பீட்டர் மான்ஸ்ஃபீல்ட் என்பவருடன் சேர்ந்து உருவாக்கிய MRI ஸ்கேனிங் கருவிக்கு 2003இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

  • ஆல்பர்ட் லாஸ்கர் விருது, ஹர்வே பரிசு
  • அறிவியலுக்கான தேசியப் பதக்கம்
  • தொழில்நுட்பத்துக்கான தேசியப் பதக்கங்கள் பெற்றுள்ளார்.
கதிர்வீச்சைப் பயன்படுத்தாமல், பக்கவிளைவுகள் ஏற்படுத்தாமல் மனித உள்ளுறுப்புகளைத் தௌிவாகக் காட்டக்கூடிய கருவியைச் சாத்தியமாக்கிக் காட்டி, மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் சாதனை செய்த பால் கிறிஸ்டியன் லாட்டர்பர் 78வது வயதில் (2007) மறைந்தார்.


சிக்மண்ட் பிராய்ட்

நவீன மனநல மருத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிராய்ட் 1856ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி, அன்றைய ஆஸ்திரியப் பேரரசின் ஃபிரெய்பர்க் நகரில் (தற்போது செக் குடியரசில் உள்ளது) பிறந்தார்.

இவர் செரிப்ரல் பால்ஸி, அபேஸியா போன்ற மூளை பாதிப்புகள் தொடர்பாக 1895இல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

சுயநினைவு இல்லாதது பற்றிய இவரது கோட்பாடுகள், மனம் தொடர்பான நுணுக்கங்கள், மனநோய்கள் குறித்த விளக்கங்கள் ஆகியவை மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

உளவியல் என்பது உயிரோட்டமுள்ள உளவியல் என்ற பெயரில் முன்வைத்தார். மனிதனின் குண இயல்புகளை வகைப்படுத்தினார். 

மனிதனின் குணநலன்களுக்கு இடையே நடைபெறும் போராட்டமே மனித ஆளுமையை நிர்ணயிக்கிறது என்று கூறினார்.

மனம் என்ற ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தின் எல்லைக்குள் கொண்டுவந்த சிக்மண்ட் பிராய்ட் 83வது வயதில் (1939) மறைந்தார்.


மே 6 அன்று நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

  • 1952ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி இத்தாலியில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண் மரியா மாண்ட்டிசோரி மறைந்தார்.
  • 1967ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார்.
  • 1854ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.

                                                                                                                                நன்றி  நித்ரா தமிழ் நாட்காட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...