12 ஆகஸ்ட், 2017


“சோத்துல உப்பு போட்டு தானே  தின்ற” என்ற வாக்கியம், இன்றும் என்றென்றும் யாராவது நம் கண்முன்னே சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள்.ஏனென்றால் நாம் செய்யும் தவற்றை புரியவைக்கும்  பொருட்டு இது போன்ற வார்த்தைகளை மக்கள் சாதாரணமாக பயன்படுத்துவதை பார்க்க முடியும்.
அப்படிப்பட்ட உப்பை நம் வீட்டில் குறிப்பிட்ட சில இடத்தில வைத்தால், செல்வம் கொட்டோ கொட்டுன்னு   கொட்டுமாம். அதுமட்டுமில்லாமல் கெட்ட சக்திகள் நீங்குமாம்.ஏழ்மையும் இருக்காதாம். அது எந்தெந்த  இடம் என்பதை பார்க்கலாம் வாங்க.
முதலில், கல் உப்பை நீரில் கரைத்து வீடு முழுக்க கழுவ வேண்டும்.இதனால், வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்குமாம். இதனை ஞாயிற்றுகிழமைகளில் செய்ய கூடாது என்பது கூடுதல் தகவல்.
இதே போன்று ஒரு டம்ளர்  நீரில், உப்பு சேர்த்து தென்மேற்கு மூலையில் வைத்தால், ஏழ்மை நம்  வாழ்வில் இருக்காது என ஐதீகம். அதேவேளையில் இந்த தண்ணீரின் நிறம் மாறும் போது கண்டிப்பாக   தண்ணீரை மாற்றி வைக்க  வேண்டும்
மேலும், ஒரு டம்ளர் உப்பு நீரை, நம் பயன்படுத்தும் குளியலறையில் ஒரு மூலையில் வைத்துவிட்டால், வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி குறைந்து, ஏழ்மை நீங்கும்
சிவப்பு துணியில் உப்பை கட்டி, வீட்டின் நுழைவாயிலில்கட்டிவைத்தால், வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்கி, நல்ல அதிர்வுகளை  உண்டாக்கும்
அவ்வளவு ஏன், உப்பை தண்ணீரில் கரைத்து, குளித்தால் கெட்ட சக்திகள் மற்றும் எதிர்மறை  எண்ணங்கள் நீங்கும் என்பது ஐதீகம்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...